கண்மணியே !!..மறந்திடுவாயோ அன்பே
என் மௌனராகத்தை
என்றுமே நிலைக்காத
என் இதயராகத்தை ...

காணாமல் இருந்தால்
கரைபுரளும் கண்கள்
கடந்த காலமெல்லாம்
கைப்பிடித்த விரல்கள் ...

மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...

பேசாமல் இருந்தால்
மௌனமாய் அழுதிருக்கும்
என்றுமே இமையாக
ஏக்கமாய் தவித்திருக்கும் ...

மறந்திடாதே அன்பே
உன் உயிரிதனை...
அதுவும் மறைந்திடுமே
இவ்வுலகை மறந்தே ..

கண்மணியே !..


நிலவே
மறைந்ததேனோ
நினைவு மேகம்
மறைத்ததோ எனையும்
இளம் தென்றலாய்
எனை தழுவிய
நீயும்
எங்கோ வெகு தூரம்
விடை சொல்லாமல்
விட்டு சென்றதெங்கே ???..

இதயத் தோட்டத்தில்
ஆசை பூவெல்லாம்
வீணாக உதிர்ந்து
வீழ்கிறதே மண்ணில் ...

உனக்காகவே
மீண்டும் ஒரு ஜென்மம்
எடுத்திடுவேன்...
நீ
உறங்க ..
அன்றும்
தாலாட்டும் தொட்டிலாய்
என் இதயம் ..
உனை தாங்கி நிற்கும்
கண்மணியே ...

என்னவளே !!


அன்பே
விடை தெரியாமல்
வியக்கின்றேன் ...

முழு நிலவாம்
உன் முக அழகா
இல்லை ..

முல்லை
பூக்களாய்
இதழ் விரியும்
உன் சிரிப்பழகா
இல்லை..

அழகான
தண்ணீர் தேக்கத்தில்
அர்த்த ஜாமத்தில்
பிரதிபலிக்கும்
பௌர்ணமி நிலவாய்
உறவாடி விளையாடும்
உன் கருவிழி அழகா..
இல்லை..

கண்ணா
என
என் பெயரை
காதலோடு
காற்றினில்
கரைய விடுகையில்
கடித்துவிட
நான் துடிக்கும்
உன் கவர்ச்சி
இதழ் அழகா
இல்லை..

பாசம் பணிவு
இரக்கம் என
அத்தனை குணங்களையும்
அளவில்லாமல்
அள்ளி தரும்
உன் மன அழகா ...

எங்கே
மயங்கினேன்...
எனத் தெரியவில்லை
அன்பே ..

உனக்கு
தெரிந்திருந்தால்
சொல்வாயா ? ..
பொக்கிசமாய்
நீயும்
என்னில்
புகுந்து விட்ட
ரகசியத்தை ,...