உன் நினைவுகள் ..


என் காதல்....

அக்ஷய
பாத்திரமாய்
என் காதல்...
அதில்
கற்பக விருட்சமாய்
உன் நினைவுகள் ..
-விஷ்ணு

நினைவுகள் ...

நினைவுகள் ...

கொஞ்சும்
கொலுசொலி ...
கிலுகிலுக்கும்
வளையோசை
முணுமுணுக்கும்
மெல்லிசை ...
ஒலியாக
ஏதாவது ஒன்று
ஒளியேற்றி விட்டு தான்
செல்கிறது
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளை ...
- விஷ்ணு
                            

ஆர்ப்பாட்டம் ??


என் காதல்...

அமைதியாய்
தானே
அருகில் இருக்கிறாய் ..
உன்
அழகுக்கு மட்டும்
ஏனடி
இத்தனை
ஆர்ப்பாட்டம் ??
- விஷ்ணு

என் காதல் ..


என் காதல் ..

மல்லிகை
பூவில்
ரோஜாவின் மணம் ..
முறைக்காதே ..
உன்
கூந்தலிலிருந்து
உதிர்ந்தப் பூவடி இது ...

- விஷ்ணு

வண்ண வண்ண கோலங்கள் ...என் காதல் வாசலிலே
வண்ண வண்ண
கோலங்கள் ..
விரல்களில் வெட்கத்தை வைத்து
விழிகளில் வரைந்தாயோ
என்னவளே ...
- விஷ்ணு

உயிர்த் தீ ...உருகி உருகி
எரிகிறது உயிர்த் தீ ...
பற்றிக்கொண்டது
உன் பார்வையால் தான் என
உனக்கு தெரியுமா ??
          - விஷ்ணு

பொறாமைபொறாமையாய்
இருக்கிறது பெண்ணே
எத்தனை விலக்கியும்
மீண்டும் மீண்டும்
உன் முகம் தழுவும்
உன் கூந்தலை
நினைக்கையில்
          - விஷ்ணு

ஆத்மாவை தொட்டவள் ...என்
இதயத்தை
தொட்ட தோழிகள் பலர் ...
என் கவித்தோழியே
நீ மட்டுமே
என் ஆத்மாவை தொட்டவள் ...
                 - விஷ்ணு