உன் நினைவுகள் ..


என் காதல்....

அக்ஷய
பாத்திரமாய்
என் காதல்...
அதில்
கற்பக விருட்சமாய்
உன் நினைவுகள் ..
-விஷ்ணு

நினைவுகள் ...

நினைவுகள் ...

கொஞ்சும்
கொலுசொலி ...
கிலுகிலுக்கும்
வளையோசை
முணுமுணுக்கும்
மெல்லிசை ...
ஒலியாக
ஏதாவது ஒன்று
ஒளியேற்றி விட்டு தான்
செல்கிறது
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளை ...
- விஷ்ணு
                            

ஆர்ப்பாட்டம் ??


என் காதல்...

அமைதியாய்
தானே
அருகில் இருக்கிறாய் ..
உன்
அழகுக்கு மட்டும்
ஏனடி
இத்தனை
ஆர்ப்பாட்டம் ??
- விஷ்ணு

என் காதல் ..


என் காதல் ..

மல்லிகை
பூவில்
ரோஜாவின் மணம் ..
முறைக்காதே ..
உன்
கூந்தலிலிருந்து
உதிர்ந்தப் பூவடி இது ...

- விஷ்ணு

வண்ண வண்ண கோலங்கள் ...



என் காதல் வாசலிலே
வண்ண வண்ண
கோலங்கள் ..
விரல்களில் வெட்கத்தை வைத்து
விழிகளில் வரைந்தாயோ
என்னவளே ...
- விஷ்ணு

உயிர்த் தீ ...



உருகி உருகி
எரிகிறது உயிர்த் தீ ...
பற்றிக்கொண்டது
உன் பார்வையால் தான் என
உனக்கு தெரியுமா ??
          - விஷ்ணு

பொறாமை



பொறாமையாய்
இருக்கிறது பெண்ணே
எத்தனை விலக்கியும்
மீண்டும் மீண்டும்
உன் முகம் தழுவும்
உன் கூந்தலை
நினைக்கையில்
          - விஷ்ணு

ஆத்மாவை தொட்டவள் ...



என்
இதயத்தை
தொட்ட தோழிகள் பலர் ...
என் கவித்தோழியே
நீ மட்டுமே
என் ஆத்மாவை தொட்டவள் ...
                 - விஷ்ணு

மௌனமாய்...

மௌனமாய்...
************

எண்ணங்களில் நீ..
எழுத்துக்களில் நீ..
வண்ணங்களில் நீ..
வானவில்லாய் நீ..
அன்பிலும் நீ..
ஆசையிலும் நீ ..
கோபத்திலும் நீ..
கொஞ்சலிலும் நீ..

உள்மனதுள்
தாளமாய்
ஒலித்துகொண்டே நீயும் ...
உனை உணர்த்தவே
முடியாமல்
மௌனமாய் நானும் ...
- விஷ்ணு

நீயாக..

நீயாக..
*******

என்
காதலாய் ..
கருணையாய்..
நிழலாய் ...
நீ இருக்கிறாய் .....
நானோ ..
நீயாக இருக்கிறேன்

- விஷ்ணு

உன் நேசம் ...

உன் நேசம் ...
*****************

உன் வீட்டு தோட்டத்தில்
உலவித்திரிந்த
வண்ணத்துப்பூச்சி..
என் முற்றம் கடக்கும் தருணம்
எதிர்பாராமல் எனை தீண்ட
என் விரல்களிலும்
ஒட்டிக்கொண்டதே
உன் நேசம் ...
- விஷ்ணு

நம் காதல் ..



என் விழிகளுக்குள்
நீ என்றால் l
நம்ப மறுக்கிறாயே 
உ ணரவில்லையா ??
முத்துக்களாய்
நம் காதல் விழி சிப்பிக்குள்
தவம் செய்வதை ??? 
              - விஷ்ணு
    

மீண்டும் மீண்டும் ..




எரிகிறேன் மீண்டும் ...
*****************************

உருத்தெரியா ஒன்று
உணர்வுகளுக்குள்
தீ கொளுத்தி
திசை மாறி நடக்கிறது ...

தேடியும் தெரியவில்லை
சுடர்விட்டு படர்கிறது
உன் நினைவுகள் ..
நாடி நரம்புகளில் தீ
நாளமாய் ...

சுகமாகவே எரிகிறேன்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளால் தொடங்கி
உன் நினைவுகளையே
சாம்பலாய் உதிர்த்து
எரிகிறேன் மீண்டும் ...

உயிரானவளே ...




 
சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...

என் கவிதையான நிலவே ....







அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..

வழியோர பயணங்களில்
ஆரவாரமான
இரைச்சல்களுகிடையே
மெலிதாக கேட்ட
சில பாடல் வரிகள் கூட
கொளுத்திவிட்டு போகிறது
உன்
நினைவுத்திரியை ...

நான்
எரியத்தொடங்கி
நாட்கள் வெகுவாயிற்று
புகைந்தும்
அணைந்தும் எரிந்தபடி ...
என்றும்
அணையாமலே
உன் நினைவுகளில்...