என்னவளே !!!...


இதயம்
பட படவென
துடிக்கிறது பெண்ணே
நெருங்கிடவேண்டும்
உன்
நிழலையாவது
நான் பார்த்திட வேண்டும் ..

காலம்
கடந்து விட்டது
காத்திருக்க நேரமில்லை
கனவுகள்
கலைந்து போனாலும்
நினைவுகளை
நிலைக்க விடமாட்டேன்

என் சுவாசம்
சிறைபடும்முன்
உன் வாசத்தில்
நானும்
வசப்பட வேண்டும்

உன்
பார்வை
கணைகளால்
நான் ஊனமாக வேண்டும் ...
உன் இதழ் தரும்
தீண்டல்களே
அதற்கு
மருந்தாக வேண்டும் ...

மஞ்சமாக
மலர் நீயும்
மடி தரவேண்டும்
தஞ்சமாக
நானும் அதில்
தலை சாய்க்க வேண்டும்

உன்
மார்போடு
முகம் புதைத்து
நான் அழ வேண்டும்
மலர் உந்தன் கைகள்
எனைத் தழுவ வேண்டும்

என்றுமே
என்னவளாய்
நீ இருக்க வேண்டும் ...
உனை பிரியும்
நாள் அன்று
என் உயிர்
பிரிய வேண்டும் ..

என்னவளே !...அன்பைத் தேடி
அலைந்துதேய்ந்த
நாட்களின்
இருண்ட
இரவுகளில்...


சிறு புள்ளி
வெளிச்சமாய்
எங்கோ தூரத்தில்
நீ ...நீயே தான்

நம்பிக்கை
கை தர
நிமிர்ந்து
நடை போட்டே
நெருங்கிவிட்டேன்
உன்னை..

ஆயுள்
குறைகிறது
இந்த ஜென்மம்
தீர்ந்து விடலாம்

மனதில் மட்டும்
அவ்வப்போது
சிறு சலனம் ..

நிருபிக்க முடியாமல்
போய் விடுமோ
நீயே
எனதுயிர் என்ற
உண்மை !!!...