என்னவளே !!!...


இதயம்
பட படவென
துடிக்கிறது பெண்ணே
நெருங்கிடவேண்டும்
உன்
நிழலையாவது
நான் பார்த்திட வேண்டும் ..

காலம்
கடந்து விட்டது
காத்திருக்க நேரமில்லை
கனவுகள்
கலைந்து போனாலும்
நினைவுகளை
நிலைக்க விடமாட்டேன்

என் சுவாசம்
சிறைபடும்முன்
உன் வாசத்தில்
நானும்
வசப்பட வேண்டும்

உன்
பார்வை
கணைகளால்
நான் ஊனமாக வேண்டும் ...
உன் இதழ் தரும்
தீண்டல்களே
அதற்கு
மருந்தாக வேண்டும் ...

மஞ்சமாக
மலர் நீயும்
மடி தரவேண்டும்
தஞ்சமாக
நானும் அதில்
தலை சாய்க்க வேண்டும்

உன்
மார்போடு
முகம் புதைத்து
நான் அழ வேண்டும்
மலர் உந்தன் கைகள்
எனைத் தழுவ வேண்டும்

என்றுமே
என்னவளாய்
நீ இருக்க வேண்டும் ...
உனை பிரியும்
நாள் அன்று
என் உயிர்
பிரிய வேண்டும் ..

2 comments:

cheena (சீனா) said...

நண்ப

வலைப்பூவின் முகப்பு அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படங்கள் நிறைந்த பக்கங்கள். காணும் போதே மனம் மகிழ்கிறது.

உன்னவளின் நிழலையாவது காணத்துடிக்கும் உன் உள்ளம் -

கனவுகள் கலைந்த போதும் நினைவுகளை நிஜமாக்கத் துடிக்கும் நெஞ்சம் -

வாசத்தில் வசப்படத் துடிக்கும் மனம் -

ஊனமகவும் தயார் - இதழ் ரச மருந்திற்காக -

மடியில் தலை சாய்க்கும் சுகம் -

அழும்போது தழுவும் கைகளின் சுகம்

என்றுமே உன்னவள் உன்னவளாய் இருக்க நினைக்கும் பேராசை

அடடா அடடா என்னே காதல் ரசம் சொட்டும் கவிதை.

படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

அழகான வரிகள் - படிக்கும் போதே உணர வைக்கும் வரிகள் -

படங்களும் பாடல்களுமாக கலக்கும் வலைப்பூ

நன்று நன்று நல்வாழ்த்துகள்

Vishnu... said...

அன்பு சீனா ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் ...

ரெம்ப நாளாகவே மனதில் சிறு நெருடல் இருந்துகொண்டு இருந்தது ..
ஐயா அவர்கள் எத்தனையோ வலை தளங்கள் வலம் வருகிறார்கள் ..ஆனால் நமது வலைத்தளம் மட்டும் அவர் கண்களுக்கு புலப்படாமல் இருக்கிறதே என ...அந்த நெருடல் இன்று இல்லை ..உங்கள் வருகை எனக்கு அவ்வளவு உற்சாகம் தருகிறது ..இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தோழர் ஸ்ரீ அவர்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன் ..
உண்மையில் உங்கள் கைகளில் ஒரு பின்னூட்டம்
இதைவிட மகிழ்ச்சியானது
எனக்கு வேறு எதுவும் இல்லை ...

எனது ஒரு ஆக்கத்திற்கு
திரு புகாரி... அவர்கள் அன்புடனில் பின்னூட்டம் இட்டிருந்தார் ..அப்போது நான் எவ்வளவு மகிந்தேனோ
அதே உற்சாகம்
மீண்டும் என்னில் குடி கொண்டிருக்கிறது இப்போது ...

உங்கள் பின்னூட்டம் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது ..அடிக்கடி எனது வலைத்தளங்கள் வருகை தந்து என்னை வழி நடத்த
அன்புடன் வேண்டுகிறேன் ...

நன்றி கலந்த வணக்கங்களுடன்அன்புடன்
என்றும் இனிய
விஷ்ணு ...