உயிரானவளே ...
 
சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...

என் கவிதையான நிலவே ....அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..

வழியோர பயணங்களில்
ஆரவாரமான
இரைச்சல்களுகிடையே
மெலிதாக கேட்ட
சில பாடல் வரிகள் கூட
கொளுத்திவிட்டு போகிறது
உன்
நினைவுத்திரியை ...

நான்
எரியத்தொடங்கி
நாட்கள் வெகுவாயிற்று
புகைந்தும்
அணைந்தும் எரிந்தபடி ...
என்றும்
அணையாமலே
உன் நினைவுகளில்...