என் அன்பே ......நீ
அதிஷ்டம் செய்தவள்
அன்பே ...

ஆம்
தினம் தினம்
புதுப்புது ஓவியங்களாய்
புத்துயிர் பெறுகின்றாய் ...
உன் உச்சி முதல்
பாதம் வரை
வர்ணனைகள் கொண்டு
வண்ணம் தீட்டுகிறேன் ...

திசை தெரியாமல்
புறப்பட்ட
என் நினைவு ஓடங்கள்
இதோ
சரியான பாதையில்
உன் நினைவுகளை
தழுவிக்கொண்டு ...
கரை சேர போகின்றன ...

இனியும்
மூடி வைப்பது
இயலாது கண்ணே ..

இடியும் மின்னலும்
எனை தாக்குகின்றன ..
உன் நினைவுகளை
இனி தேக்க
இதயத்தில் இடமில்லை ..

கவிமழையாய்
பொழிகின்றேன்
ஒரு துளியாவது
உனை தீண்டும் என்ற
நம்பிக்கையில் ....