
நீ
அதிஷ்டம் செய்தவள்
அன்பே ...
ஆம்
தினம் தினம்
புதுப்புது ஓவியங்களாய்
புத்துயிர் பெறுகின்றாய் ...
உன் உச்சி முதல்
பாதம் வரை
வர்ணனைகள் கொண்டு
வண்ணம் தீட்டுகிறேன் ...
திசை தெரியாமல்
புறப்பட்ட
என் நினைவு ஓடங்கள்
இதோ
சரியான பாதையில்
உன் நினைவுகளை
தழுவிக்கொண்டு ...
கரை சேர போகின்றன ...
இனியும்
மூடி வைப்பது
இயலாது கண்ணே ..
இடியும் மின்னலும்
எனை தாக்குகின்றன ..
உன் நினைவுகளை
இனி தேக்க
இதயத்தில் இடமில்லை ..
கவிமழையாய்
பொழிகின்றேன்
ஒரு துளியாவது
உனை தீண்டும் என்ற
நம்பிக்கையில் ....
11 comments:
பின்னீட்டீங்க போங்க..
:))
முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றிகளுடன் ...
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..
அசத்தல்!
// இனியவள் புனிதா said...
அசத்தல்!//
முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் அன்பு கலந்த நன்றிகளுடன் ..
அடிக்கடி வருகை தர
அன்புடன் வேண்டும் ...
விஷ்ணு
அருமையான கவிதைகள் விஷ்ணு.குட்டிக் குட்டிக் கவிதைகள் ...இன்னும் நிறைய இருக்கு.இன்னும் வருவேன்.
//Azoreano Náufrago said...
Fixe!//
Thank U & Visit again
//ஹேமா said...
அருமையான கவிதைகள் விஷ்ணு.குட்டிக் குட்டிக் கவிதைகள் ...இன்னும் நிறைய இருக்கு.இன்னும் வருவேன்.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஹேமா ..
மீண்டும் மீண்டும்
வர அன்புடன் வேண்டுகிறேன் ...
நல்லாருக்கு அண்ணா..!! :))
குழைவுடன் கவிதைசொல்வது உங்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது நண்பரே.
தொடர்ந்து கலக்குங்க
வாழ்த்துக்கள்
//ஸ்ரீமதி said...
நல்லாருக்கு அண்ணா..!! :))//
ஸ்ரீ மா ..எப்படி இருக்கிறாய் டா?..
நலமா ?..
வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் தங்கையே ..
அன்பு
அண்ணன் ..
//சுபாஷ் said...
குழைவுடன் கவிதைசொல்வது உங்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது நண்பரே.
தொடர்ந்து கலக்குங்க
வாழ்த்துக்கள்//
வேற வழி இல்லை நண்பரே ..குழையாமல் ..காரியம் நடக்காதே ..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகளுடன்
விஷ்ணு
Post a Comment