மீண்டும் மீண்டும் ..
எரிகிறேன் மீண்டும் ...
*****************************
உருத்தெரியா ஒன்று
உணர்வுகளுக்குள்
தீ கொளுத்தி
திசை மாறி நடக்கிறது ...
தேடியும் தெரியவில்லை
சுடர்விட்டு படர்கிறது
உன் நினைவுகள் ..
நாடி நரம்புகளில் தீ
நாளமாய் ...
சுகமாகவே எரிகிறேன்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளால் தொடங்கி
உன் நினைவுகளையே
சாம்பலாய் உதிர்த்து
எரிகிறேன் மீண்டும் ...
உயிரானவளே ...
சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...
தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....
பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...
இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...
Labels:
உயிரானவளே ...கவிதை by விஷ்ணு
என் கவிதையான நிலவே ....
அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..
கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..
வழியோர பயணங்களில்
ஆரவாரமான
இரைச்சல்களுகிடையே
மெலிதாக கேட்ட
சில பாடல் வரிகள் கூட
கொளுத்திவிட்டு போகிறது
உன்
நினைவுத்திரியை ...
நான்
எரியத்தொடங்கி
நாட்கள் வெகுவாயிற்று
புகைந்தும்
அணைந்தும் எரிந்தபடி ...
என்றும்
அணையாமலே
உன் நினைவுகளில்...
என் அன்பே ......

நீ
அதிஷ்டம் செய்தவள்
அன்பே ...
ஆம்
தினம் தினம்
புதுப்புது ஓவியங்களாய்
புத்துயிர் பெறுகின்றாய் ...
உன் உச்சி முதல்
பாதம் வரை
வர்ணனைகள் கொண்டு
வண்ணம் தீட்டுகிறேன் ...
திசை தெரியாமல்
புறப்பட்ட
என் நினைவு ஓடங்கள்
இதோ
சரியான பாதையில்
உன் நினைவுகளை
தழுவிக்கொண்டு ...
கரை சேர போகின்றன ...
இனியும்
மூடி வைப்பது
இயலாது கண்ணே ..
இடியும் மின்னலும்
எனை தாக்குகின்றன ..
உன் நினைவுகளை
இனி தேக்க
இதயத்தில் இடமில்லை ..
கவிமழையாய்
பொழிகின்றேன்
ஒரு துளியாவது
உனை தீண்டும் என்ற
நம்பிக்கையில் ....
Labels:
என் அன்பே ......by....விஷ்ணு ...
நீ ...

நீ...
இனிய தென்றல் ...
என் இமைகளை
பார்வைகளால்
வருடி செல்கையில் ...
*
நீ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
*
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
*
நீ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
*
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...
Labels:
நீ ...
Subscribe to:
Posts (Atom)



