
மறந்திடுவாயோ அன்பே
என் மௌனராகத்தை
என்றுமே நிலைக்காத
என் இதயராகத்தை ...
காணாமல் இருந்தால்
கரைபுரளும் கண்கள்
கடந்த காலமெல்லாம்
கைப்பிடித்த விரல்கள் ...
மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...
பேசாமல் இருந்தால்
மௌனமாய் அழுதிருக்கும்
என்றுமே இமையாக
ஏக்கமாய் தவித்திருக்கும் ...
மறந்திடாதே அன்பே
உன் உயிரிதனை...
அதுவும் மறைந்திடுமே
இவ்வுலகை மறந்தே ..
2 comments:
Cute lines.......so nice:))
உன் உயிர்தனை...இப்படிதானே வரும்??
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் திவ்யா..
நீங்கள் சொல்வதும் சரி தான் ஆனால்..
உன் உயிர் தனை என்று சொல்லும்போது உனது உயிரை நீ மறக்காதே என்பது எளிமையாக சொல்வதும் போல இருக்கும் ..ஆனால் நான் சொல்ல வந்தது என்னை மறக்காதே ..என்னை மறந்தால் நான் உலகத்தை மறந்து விடுவேன் .
நான் யாரென்றால் அவளது உயிர் ...
உன் உயிர் இது ....அதைத்தான் (உன் உயிர் + இதனை ...
உன் உயிரிதனை ..)
என்று எழுதினேன் ...சரி என்று நினைக்கிறேன் ..
என்ன சொல்கிறீர்கள் பிழை
என தெரிந்தால் தவறாமல்
எனக்கு தெரிவிக்கவும் ..
திருத்திக்கொள்கிறேன் ..
அடிக்கடி வர
அன்புடன் வேண்டுகிறேன் ..
அன்புடன்
என்றும்
இனிய தோழன் ...
விஷ்ணு ..
Post a Comment