என் கவிதையான நிலவே ....







அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..

வழியோர பயணங்களில்
ஆரவாரமான
இரைச்சல்களுகிடையே
மெலிதாக கேட்ட
சில பாடல் வரிகள் கூட
கொளுத்திவிட்டு போகிறது
உன்
நினைவுத்திரியை ...

நான்
எரியத்தொடங்கி
நாட்கள் வெகுவாயிற்று
புகைந்தும்
அணைந்தும் எரிந்தபடி ...
என்றும்
அணையாமலே
உன் நினைவுகளில்...

6 comments:

ஹேமா, said...

விஷ்ணு,காதலின் ஆழமும் அழுத்தமும் அமுங்கிக் கிடக்கிறது கவிதையில்.உங்கள் காதலிக்காக எழுதினதா?

Vishnu... said...

// ஹேமா, said...
விஷ்ணு,காதலின் ஆழமும் அழுத்தமும் அமுங்கிக் கிடக்கிறது கவிதையில்.உங்கள் காதலிக்காக எழுதினதா? ///

முதல் பின்னுட்டத்திற்கு நன்றிகள் ஹேமா அவர்களே ..உண்மை தான் இந்த வலைதளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் நீங்கள் சொல்லியவருக்கு எழுதியவையே ...

அன்புடன்
விஷ்ணு

Unknown said...

உண்மைதான்.........சில பாடல் வரிகள் காற்றில் மிதந்து வந்து மலரும் நினைவுகளை கிளறி விடுகிறது...

இந்தக் கவிதையும் மிகவும் அழகு, நண்பரே!

Vishnu... said...

Kanthi said...
உண்மைதான்.........சில பாடல் வரிகள் காற்றில் மிதந்து வந்து மலரும் நினைவுகளை கிளறி விடுகிறது...

இந்தக் கவிதையும் மிகவும் அழகு, நண்பரே!


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அன்பின் காந்தி அவர்களே ....

அன்புடன்
விஷ்ணு

Anonymous said...

அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..
ninaivu valaikalum,nizhalum kooda kavi paduthe. arumai.

Anonymous said...

அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..
ninaivu valaikalum,nizhalum kooda kavi paduthe. arumai.